என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பணி இடைநீக்கம்
நீங்கள் தேடியது "பணி இடைநீக்கம்"
- சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சந்திரசேகர் பணிபுரிந்து வருகிறார்.
- உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகர். இவர் சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார் வந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்கடர் சந்திரசேகர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் ஒசமணி தற்கொலை செய்து கொண்டார். #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl
பெங்களூரு:
பெங்களூரு ஞானபாரதியில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செயல்பட்டு வருகிறது. இங்கு கபடி பயிற்சியாளராக ருத்ரப்பா வி.ஒசமணி (வயது 59) பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்திலும் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ருத்ரப்பா வி.ஒசமணி மீதான புகாரை விசாரிக்க இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டது. தனிக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் ருத்ரப்பா வி.ஒசமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஞானபாரதி போலீசில், ருத்ரப்பா வி.ஒசமணி மீது புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, பயிற்சியாளரான ருத்ரப்பா வி.ஒசமணி தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவுக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து அவர் தங்கினார். அதன்பிறகு, அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று முன்தினம் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலும், உதவ யாரும் முன்வராததாலும் இந்த முடிவை தேடிக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மகனே ராகேஷ், நீ உன் அம்மா தேவிகாவை நன்றாக பார்த்து கொள். எனது உடலை தானம் செய்து விடுங்கள். உயிர் விடுவதற்கு முன்பு உங்களை பார்க்க விரும்பினேன். என்னிடம் புகைப்படம் இல்லாததால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை’ என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl

கர்நாடக முதல்-மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த போலீஸ்காரர் அருண் டோலினை மாநகர போலீஸ் கமிஷனர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். #Kumaraswamy #Constable #Suspended
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #Constable #Suspended

ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகளுடன் கடந்த 4-ந் தேதி ஊட்டிக்கு சென்றனர். பின்னர், கோவை வந்த அவர்கள் அங்கிருந்து சென்னை வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில், சேலம்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது, ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரான கோவையை அடுத்த போத்தனூர் காந்திநகரை சேர்ந்த அனீஷ்குமார் (வயது 25) என்பவர், அந்த தம்பதியின் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால் அவளது பெற்றோர் மற்றும் சக பயணிகள், அனீஷ்குமாரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீஷ்குமாரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.

×

X